மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

 இன்று மதியம் 12 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். 

தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமன்ற தேர்தலில் துணை முதல்வர் ஓபிஎஸ், போடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, இன்று மதியம் 12 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.