100 சதவீதம் வாக்களிப்போம் மாற்றுத்திறனாளிகள் பேரணி

 
          
     


       சென்னை சிங்கார வேலர் மாளிகையில்   இன்று   16.3.2021 காலை 11 மணியளவில், 

6.4.2021 சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் நூறு சதவிகிதம் வாக்களிக்க கோருகின்ற
மாற்றுத்திறனாளிகள் பங்கு பெறுகின்ற இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களின்  விழிப்புனர்வு பேரணி சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து  தொடங்கி ரிசர்வ் வங்கி சாலை சந்திப்பில் முடிவடைந்த்து

     .


மாற்றுத்திறனாளிகள் பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் நடத்தப்படும் தேர்தல் விழிப்புனர்வு பேரணியினை சென்னை 
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. சீதாலட்சுமி.இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை நன்பர்கள்  மாற்றுத்திறனாளிகள் சங்கம் ,மனித நேயம் சங்கம் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 109 நபர்கள் பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மாஸ்க் குடன் பேரணியில் கலந்து கொண்டனர்.