இன்றைய ராசிபலன் 09/03/2021


மேஷம்

மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்பு கள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்ப தால் எதையோ இழந்ததைப் போல்காணப்படுவீர்கள்  மற்றவர்களைபற்றிவீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தி யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

கடகம்: புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சூட்சமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்

சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்று மதத்தவர் களால் உதவி  கிடைக்கும்.உங்களால் பயனடைந்தவர் சிலரை இப்போது நீங்கள் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் அதிகரிக்கும். உத்தியோ கத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும்  நாள்.

கன்னி

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்கால திட்டங்கள் நிறை வேறும். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வழியில் நல்ல செய்தியை கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்

துலாம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர் களால் மனக்கசப்புகள் நீங்கும். புது வேலை அமையும்.வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேற்றம் காணும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை செய்து முடிப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமானதீர்ப்பு வரும்.குடும்பத் தில் சில விஷயங்களை முன் நின்று செய்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு

தனுசு: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகவும் பேசுவீர்கள் செயல் படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த கால இனி அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டா தீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தினருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

மீனம்

மீனம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள், உறவினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் ரசனைகளை புரிந்து கொண்டு மாற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.