துணைநிலை ஆளுநர் - கிரண்பேடி நீக்கம்

 


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம்.

அரசின்  நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், தற்போது துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

                                   


இதனால், கூடுதல் பொறுப்பாக துணை நிலை ஆளுநராக தமிழிசை சௌந்தராஜன் செயல்படுவார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், கிரண் பேடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து  4 எம்.எல்.ஏக்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.