சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் விசாரித்தார்

 சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் விசாரித்தார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தான் அதிகாரம் உள்ளது. உறவினர் என்ற முறையில் தான் சசிகலாவை பார்க்க வந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

**************************

சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தி.நகர் இல்லத்திற்கு சசிகலா வந்தடைந்தார். நேற்று காலை 7 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா 23 மணி நேர தொடர் கார் பயணத்திற்கு பின்னர் இன்று அதிகாலையில் சென்னை வந்தடைந்தார். அதிமுக கொடியுடன், அதிமுக துண்டு போட்டு சென்னை வந்தடைந்தார். தி.நகர் வீட்டிற்கு வந்ததும், ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

**************************

சென்னை ராமாபுரத்தில் எம்ஜிஆர் நினைவு மண்டபம், ஜானகி நினைவிடத்தில் மலர்தூவி சசிகலா மரியாதை செலுத்தினார். பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின் சென்னை வந்த சசிகலா மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவரது வாரிசுகளிடம் சசிகலா நலம் விசாரித்தார்.

*********************

காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லை பகுதியான தாமல், பாலுசெட்டிசத்திரம் ஆகிய பகுதிகளில் அதிமுக, அமமுக தொண்டர்கள் பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டி சசிகலாவுக்கு வரவேற்பளித்தனர். 

*********************

மேலும் தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் வந்த தொண்டர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்து வரவேற்பளித்தனர். 

**************