சினிமா செய்திகள்

 


சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் பெரிய பிளஸ்சாக அமைந்தது ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். அதனால் சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

***********************

சமீபத்தில் அரசு, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால் தொடர்ந்து, அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படைகளின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 'பாரிஸ் ஜெயராஜ்  வரும் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'பாரிஸ் ஜெயராஜ்'. அனைகா சோதி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

**************************

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இளம் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும் தேசிய விருதை வென்ற நடிகையாகவும் மாறியவர் இவர்.

ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்தில் பிரபல Forbes நிறுவனம் வெளியிடும், அந்த வகையில் இந்த ஆண்டில் இந்தியளவில் மிகவும் பிரபலமான 30 வயதுக்குள் இருக்கும் பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் தென்னிந்திய கதாநாயகிகளில் நடிகை கீர்த்தி சுரேஷ் மட்டுமே இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

**********************

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் "டான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் சூரி காம்போவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற பல படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த காம்போ மீண்டும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

**********************

கொரோனா சிக்கல்களுக்கு இடையிலும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த ஜனவரி 13 ம் தியேட்டரில் தளபதியின் மாஸ்டர் படம் வெளியானது.  இத்தனைக்கு தியேட்டரில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலை.

அதே வேளையில் கொரோனா காரணமாக வெளிநாடுகளில் படம் வெளியாகவில்லை. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த தமிழ் பெண்ணும் விஜய் ரசிகையுமான ஆஷ்லினா மாஸ்டர் படம் பார்ப்பதற்காகவே குடும்பத்துடன் சென்னை வந்துள்ளார். சென்னையை பூர்வீகமாக கொண்ட அவர் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் சென்னை அண்ணா சாலையில் உள்ள தியேட்டரில் ஒட்டு மொத்த இருக்கைகளையும் புக் செய்து தன் குடும்பம் உறவினர்கள் என அனைவருடன் படம் பார்த்து மகிழ்ந்துள்ளாராம்.