செய்திகள்


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தா.பாண்டியனின் உடல்நிலை கவலைகிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

வெண்டிலேட்டர் உதவியுடன் இந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம் காரணமாக தா.பாண்டியன் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

*********************************

பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது போதாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்,

**********************************

உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் சென்னையில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1 மற்றும் 2-வது லைனுக்கு பதில் 3, 4-வது லைனில் விரைவு ரயில்கள் பாதையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

******************************

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர்பகுதி முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரி நகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*****************************

பிப்ரவரியில் 3ம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த மாதத்திற்குள் 3-வது முறையாக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

****************************

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில், வஉசி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ஒரு பிரிவினர், ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டனர்.  

அதாவது, ஒரு சமூகத்திற்கு அதாவது, 6 பிரிவுகளை  உட்படுத்தி, தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரில் அந்த சமூகத்தினருக்கு அங்கீகாரம் கொடுக்க தமிழக அரசு பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு  தெரிவித்து, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்த்தவர்கள் துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன குரலையம், கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

***************************