ரஜினி ஒப்புதலுடன், மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம்

 


நடிகர் ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 4 கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நீக்கம்.

இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆர்எஸ் ராஜன், சதீஸ் பாபு, ஈஸ்வரிமதி, அசோக் குமார் ஆகியோர் ரஜினி மக்கள் மன்றத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், அவதூறு பரப்பி தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும்  செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தலைவர் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.