தமிழக செய்திகள்

 


சசிகலா நாளை மறுநாள் சென்னை வரவுள்ள நிலையில் சென்னையில் பேரணி குறித்து காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். பெங்களூரிலிருந்து சென்னை வரும் சசிகலா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஜெயலலிதா நினைவிடம் செல்ல திட்டமிட்டுள்ளார். 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்கள் மூடப்பட்டதை தொடர்ந்து  சென்னையில் அனுமதியின்றி பேரணி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 

***************************

சென்னை கீரீன்வேஸ் சாலையில் ராஜமாதாவே வருக வருக என்று சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதே போல் விருதுநகர் மாவட்டத்திலும் சசிகலாவை வரவேற்று அதிமுக தொண்டர்கள் உறுப்பினர் அட்டைகளுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

*************************

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குள் போலி டிக்கெட்டுடன் நுழைந்த பெண் கைது செய்யப்பட்டார். சார்ஜா செல்லும் கணவரை வழியனுப்ப வந்த பெண்ணிடம் போலி டிக்கெட் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது.

*****************************

சாத்தான்குளம் நீதிபதி சரவணுனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸை சிறையில் அடைக்க நீதிபதி சரவணக் உத்தரவிட்டார்.

**********************

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கீழக்கரை காளியம்மன் கோயிலில் 5 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சாமி சிலை திருடப்பட்டுள்ளது. குடியிருப்பு அருகேயுள்ள கோயிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் சிலையிலிருந்த 10 சவரன் நகையையும் திருடினர்.

**********************

விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்து கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்களும் காலை 10.30 மணிக்கு அரோசனையில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி என முதல்வர் அறிவித்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.

************************

டெல்லியை தவிர நாடு முழுவதும் இன்று விவசாய அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக் கோரி டிராக்டர் பேரணியை தொடர்ந்து சாலை மறியல் நடத்துகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் 73-வது நாளாக போராடி வருகின்றனர்.

************************

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலை பகுதியில் இருசக்கர வாகன பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையர் அகர்வால் தொடங்கி வைத்தார். காவல்துறை அதிகாரிகள். சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரங கௌரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

*************************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.48 அடியாகவும், நீர்இருப்பு 72.12 அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 539 கனஅடியில் இருந்து 377 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

***************************