தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ. 250 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில், அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவன்தின் கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளை ஒப்புதல் வழங்கப்பட்டு, முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கியது.
தற்பொழுது இரண்டாம் கட்டமாக, 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், உடல்நிலை சரியில்லாத 45 வயதை கடந்தோருக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை, அரசு மையங்களுடன் இணைந்து தனியார் மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மத்திய அரசு, கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை ரூ. 250-க்கும், கோவாக்சின் தடுப்பூசியை ரூ.295-க்கும் விற்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.