மீனாட்சி அம்மன் கோவில் அருகே பயங்கர தீ விபத்து

மதுரையில், பெருமாள் தெப்பக்குளத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் கடைகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 11 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

மதுரையில், பெருமாள் தெப்பக்குளத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் கடைகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 11 மணியளவில், ஒரு எலக்ட்ரானிக் கடையில் ஏற்பட்ட மின்கசிவால், தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கு பரவ தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து, கடை உரிமையாளர்கள் கூறுகையில், இந்த தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசமடைந்ததுள்ளதாக தெரிவித்துள்ளனர்.