தமிழக இடைக்கால பட்ஜெட்

 

தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

23.02.2021 காலை 11 மணியளவில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில், துணைமுதல்வர் ஓ.பி.எஸ் 10-வது முறையாக பட்ஜெட்  தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால், பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், மக்களை கவர பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

******************************

கிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர்  பழனிசாமி அவர்கள்  கூறுகையில், கிராமத்தில் இருந்து நகரம் வரை இனி ஏழை மக்களுக்கு வீடு  இல்லாதவர்கள், நிலம் இல்லாதவர்களுக்கு அரசாங்கமே 2 சென்ட் நிலம் வாங்கி சொந்தமாக கான்கிரீட் வீடு கட்டி தரும் என்றும், இனி தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலையை  தருவோம் என்று தெரிவித்துள்ளார்.

*********************