இரு வரி செய்திகள்

 திருச்செங்கோடு அருகே கவுண்டியபாளையத்தில் வயல்வெளியில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறன்றனர். விளை நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

*****************************

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் 2-வது தெருவில் தீயில் எரிந்த நிலையில் 3 பேர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெங்கடம்மா(45) அவரது மகள் ரஜிதா(26) உள்ளிட்ட 3 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது தீ வைத்து கொல்லப்பட்டனரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

**************************

103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சென்னை சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான இடம், உரிமையாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

**************************

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்க இன்று பேரவையில் சட்டமசோதா தாக்கலாகிறது. திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை பிரித்து ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

***************************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.65 அடியில் இருந்து 105.57 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவும் வினாடிக்கு 701 கன அடியில் இருந்து 539 கன அடியாக சரிந்துள்ளது.

********************************

சீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மணிப்பால் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரட்டை கொலை வழக்கை விசாரிக்க டி.எஸ்.பி பால்பாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடகு கடையில் இருந்து 12 கிலோ தங்கம் கொள்ளை போன வழக்கில் மணிப்பால் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

*************************

நாட்டாமங்கலம் அருகே மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் என கூறி சுற்றி வந்த மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஆவணங்களுடன் இருந்த தனது காரை காணவில்லை என போலீசில் மூர்த்தி புகார் அளித்திருந்தார். கார் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் வருவாய் அலுவலர் என மூர்த்தி ஏமாற்றி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

*******************************

போக்சோ வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்து தப்பி ஓடிய நபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 2019ல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக திருநாவுக்கரசு(40) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். 

விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த திருநாவுக்கரசு தண்டனை கிடைக்கும் என அஞ்சி தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய திருநாவுக்கரசை தேடி வந்த நிலையில் புளியம்பட்டி டாஸ்மாக் அருகே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த திருநாவுக்கரசுவின் உடலை கைப்பற்றி அண்ணவாசல் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.