தெய்வ அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. விநாயகரின் உருவ அமைப்பில் இருக்கும் தத்துவம் ஐந்து பெரும் சக்திகளைக் காட்டுவதாகும். மடித்து வைத்துள்ள ஒரு பாதம் பூமியையும், சரிந்த தொந்தி நீரையும், அவரது மார்புப் பகுதி நெருப்பையும், இரண்டு புருவங்களின் இணைந்த அரை வட்ட வடிவம் காற்றையும், அவற்றின் நடுவே வளைந்துள்ள கோடு ஆகாயத்தைக் குறிப்பதாகவும் அமைகின்றது.
விநாயகர் பஞ்சபூத சந்திரன் அம்சமானவர் ஆவார். மனிதனின் மனதை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. மனிதனிடம் இருக்கும் விலங்கு குணம், குழந்தை மனம், அருள் தன்மை, பெருந்தீனி, முரட்டுத்தனம், மென்மையான குணம் போன்றவற்றையும் வெளிப்படுத்தும் உருவமாக இருக்கின்றார் விநாயகர்.
* வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரியால் அர்ச்சனை செய்து ஏழைப்பெண்களுக்கு தானம் அளித்தால் திருமணத்தடை நீங்கும்.
* மேற்கு நோக்கிய அரசமரத்தடி விநாயகரை பூச நட்சத்திரத்தன்று அபிேஷகம் செய்து வழிபட்டால் பணக்கஷ்டம் தீரும். செழிப்பான வாழ்வு அமையும்.
* உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், பசுநெய், விளக்கெண்ணெய் கலந்து விளக்கேற்றி விநாயகரை வழிபட தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
* செவ்வாய், வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, தமிழ் மாதப்பிறப்பு, சதுர்த்தி நாளில் கணபதி ஹோமம் செய்தால் தடையனைத்தும் விலகும்.
* தஞ்சாவூரில் உள்ள சக்ரபாணி கோயிலில் விநாயகர் சங்கு, சக்கரத்தோடு உள்ளார்.
* ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் குழலுாதும் விநாயகர் கோயில் உள்ளது.
* பெற்றோருடன் விநாயகர் அமர்ந்திருக்கும் கோலத்தை கஜமுக அனுகிரஹ மூர்த்தி என்பர். விநாயகர் வீற்றிருக்கும் உலகத்தை ஆனந்த புவனம் என்பர்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
ஓம் நமசிவாய
மோகனா செல்வராஜ்