மேலும் செய்திகள்

 


டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் கார்டன் பொதுமக்களுக்காக இன்று முதல் திறக்கப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கும் முகல் கார்டன் மக்களுக்காக மார்ச் 21 வரை திறந்திருக்கும்.

****************************

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,856 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 26-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 10,210 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 3,137 பேர் போட்டுக்கொண்டனர். 

இதுவரை மொத்தமாக 2,27,340 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

****************************

தொடர்ந்து பல மணி நேரமாக ஐஆர்சிடிசி முடங்கியுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய ரயில்வே முன்பதிவு சேவை தளமான ஐஆர்சிடிசி தளம் 12.02.2021 தொடர்ந்து பல மணி நேரமாக முடங்கியுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதியம் முதல் தொடர்ந்து முடங்கியுள்ளதால், பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமலும், முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.

**************************

சென்னை பெரியமேட்டில் போலீஸ் நடத்திய வாகன சோதனையில் அரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சவுக்கார்பேட்டை நகைக்கடையில் பணியாற்றும் சாண்ட் (23) என்பவரிடமிருந்து தங்க நகைகளை போலீஸ் பறிமுதல் செய்தது. உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு நகைகளை பெற்று செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

************************

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

குறுகில கால பயிர்க்கடன், நகையீட்டின் பேரில் வழங்கப்பட்டுள்ள வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 

சிட்டா, பட்டா போன்ற ஆவணங்களுடன் நகையீட்டின் பேரில் பெறப்பட்டுள்ள வேளாண் கடன் மட்டுமே ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

***********************************

டெல்லியில் சில பகுதிகளில் நிலநடுக்கம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 10.30 மணி அளவில் தாஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலின் படி 6.3 ஆக பதிவாகியுள்ளது. அதன் தாக்கம் தான் டெல்லி மற்றும் உத்தரகண்ட், நொய்டாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது

**********************

நாமக்கல் பண்ணைகளில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 20 காசு அதிகரித்து 4.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் ஒரு முட்டையின் விலை 25 அதிகரித்து ரூ.4.65க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.2 அதிகரித்து ரூ.84க்கு விற்பனை செய்யப்படுகிறது.

**********************************