பாசிப்பருப்பு தோசை

 



சத்தான சுவையான பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி என்று  பார்ப்போம்.

நாம் நமது வீடுகளில் காலையில், தோசை மற்றும் இட்லி போன்ற உணவுகளை தான்  சாப்பிடுவதுண்டு. 

பல்வேறு வகையான தோசைகள் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பாசிப்பருப்பில் சுவையான சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தற்போது இந்த பதிவில் சத்தான சுவையான பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி என்று  பார்ப்போம்.

தேவையானவை

பாசிப்பருப்பு – கால் கிலோ

பச்சரிசி – கால் கப்

பெருங்காயம் – 3 சிட்டிகை

காய்ந்த மிளகாய் – 3

உப்பு – தேவைக்கேற்ப

தேங்காய் துருவல் – கால் கப்

சின்ன வெங்காயம் – 10

கறிவேப்பிலை – 1 கொத்து

 கொத்தமல்லி – ஒரு கைப்பிடி

எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

அரிசி + பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நன்றாக ஊறிய அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை தேங்காய் துருவல் எல்லாம்சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அத்துடன் ஊறிய பருப்பையும், அரிசியையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

 அரைத்து வைத்துள்ள மாவுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை சேர்க்க வேண்டும். 

பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானது ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை போல் மெல்லியதாக பரப்பி, எண்ணெய் விட்டு சிவந்து வந்தவுடன் எடுத்துவிட வேண்டும். இப்போது சுவையான பாசிபருப்பு தோசை தயார்.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை  செய்திகள் குழுவின்  சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா