தமிழக சட்டப்பேரவை -இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம்

 


இன்று தமிழக சட்டப்பேரவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறுகிறது. 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று  கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. 

இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. 

இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5-ஆம் தேதி அன்று ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும் , பதிலுரையும்  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு,  சட்டப்பேரவை உறுப்பினர், எஸ்.பி.பாலசுப்ரமணியம், புற்றுநோய் நிபுணர் சாந்தா உள்ளிட்ட பலர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.