தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி ஆலோசனை

 


இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த  உள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிற  நிலையில், இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த  உள்ளார்.

இதுகுறித்து தலைமை  செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைத்துள்ளதாகவும், ஒப்புகை சீட்டுடன் கூடிய எந்திரங்களின் பரிசோதனை முடிவடைந்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

 மேலும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குமுறையை செயல்படுத்த 12 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.