வீடில்லாத ஏழைகளுக்கு கான்கீரிட் வீடுகள் - முதல்வர் பழனிசாமி பரப்புரை

 


கொரோனா, புயல், மழை என பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருந்தேன்.

விவசாயிகளின் நலனுக்காகவே கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டது. இன்னும் 12 நாட்களில் கடன் தள்ளுபடி செய்வதற்கான ரசீது வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

கிராமத்தில் வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் நகரத்தில் வீடில்லாத இருக்கும் ஏழை மக்களுக்கு அடுக்குமாடி கான்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதல்வர் பழனிசாமி பரப்புரையில் தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் காங்கேயத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவந்ததும் அம்மாவின் அரசு தான். 

நாடு முன்னேற வேண்டும் என்றால், கல்விலே சிறக்க வேண்டும். எந்த மாநிலம் கல்வியில் சிறப்பாக இருக்கிறதோ, அங்கு எல்லாம் வளமும் தானாக வந்து சேரும் என்று பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் பழனிசாமி பரப்புரையில் பேசியுள்ளார்.