சினிமா செய்திகள்


இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரேமில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார்.

திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் கடந்துள்ளதால் சூர்யா ரசிகர்கள் ட்வீட்டரில் ஹாஸ்டெக் செய்து நேற்று கொண்டாடி தீர்த்தனர். அதனை தொடர்ந்து இந்த படத்தில் நீக்கப்பட்ட காட்சியும் நேற்று வெளியாகி ரசிகர்கள் கண்டுகளித்தனர். அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான 1 & 2  நீக்கப்பட்ட காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

*************************

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படம்.

தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த 15 ஆம் தேதி அறிவித்தார்.

****************************

விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி படம் செய்ய வேண்டும் இது எனக்கு நீண்டநாளாக ஆசை என்று இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாவை போலதான் இருக்கும். குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார்.

***********************

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்கத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருந்தார்.

உலகளவில் தற்போது வரை இந்த திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, இந்த திரைப்படம் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமாரி ஆகிய 2 மாவட்டங்களில் 10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் இன்னும் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.