வெண்டைக்காய் தக்காளி பச்சடி

 

வெண்டைக்காய் தக்காளி பச்சடி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வப்போது வெண்டைக்காய் சாப்பிட்டு வந்ததில் அவர்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

தேவையான பொருள்கள் :

வெண்டைக்காய் – 250 கி

நறுக்கிய வெங்காயம் – 1

நறுக்கிய தக்காளி – 100கி

மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

சீரகத் தூள் – ½ டீஸ்பூன்

எண்ணெய், கடுகு – தாளிக்க தேவையான அளவு

கருவேப்பில்லை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் பால் (அ) தேங்காய் துருவல் – சிறிதளவு

செய்முறை

வெண்டைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.

அதை கடாயில் போட்டு லேசாக எண்ணெய்யை ஊற்றி வதக்கவும். அதில் பிசுபிசுப்பு தண்மை மாறுவதற்கு இவ்வாறு செய்ய வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, உளுந்து போட்டு, கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.

வெங்காயத்தை போட்டு நன்கு வதங்கிய, பிறகு தக்காளியை போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும்.

அதில் வதக்கிய வெண்டைக்காயை போட்டு வதக்கவும். அத்துடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 7 முதல் 10 நிமிடம் வேக வைக்கவும்.

வெண்டைக்காய் வெந்தவுடன், சிறிதளவு தேங்காய் பால் (தேங்காய் துருவல்) ஊற்றி இறக்கி விடலாம்.

தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதி வந்தயுடன் இறக்கி விட வேண்டும்.

சுவையான வெண்டைக்காய் தக்காளி பச்சடி (Vendakka Thakkali Pachadi) ரெடியாகி விட்டது.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள் குழுவின்  சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா