வண்ணாரப்பேட்டை -விம்கோ மெட்ரோ ரயில் சேவை கொடியசைத்து தொடங்கி உரையாற்றினார் பிரதமர் மோடி

                                    


          சென்னை வண்ணாரப்பேட்டை - விம்கோ இடையிலான மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

சென்னை அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் வரவேற்றனர்


              பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்து, கிருஷ்ணர் சிலையை நினைவு பரிசாக அளித்தார் முதலமைச்சர் பழனிசாமி

            சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயல‌லிதாவின் உருவ படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

               பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகர் மோடி -


தமிழகத்தின் நலன் நாடும் தன்னிகரில்லா பிரதமர் மோடி -


பல தலைமுறைகளாக நமது தேசம் கண்டிராத தன்னிகரற்ற தலைவர் மோடி - ஓபிஎஸ்

                               


                 பிரதமர் நரேந்திர மோடியின் உரை.

               வணக்கம், வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு என தமிழில் பேசி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி 


சென்னைக்கு வருகை தந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்- 


சென்னையில் உற்சாக வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி- பிரதமர் மோடி

வண்ணாரப்பேட்டை- விம்கோ இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்துள்ளோம்

'வரப்புயர நீர் உயரும்..' என்ற ஒளவையார் பாடலை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை


*'வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்'

கல்லணைக் கால்வாயை சீரமைப்பது மூலம் 2.27 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

-ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம். ஆலைகள் வைப்போம்.. கல்விச் சாலைகள் வைப்போம் என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டினார் பிரதமர்.


          2 பாதுகாப்பு துறை தொழில் பெருந்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது- பிரதமர் மோடி


எல்லையை பாதுகாக்க அர்ஜூன் டாங்கி என்கிற வீரனை அர்ப்பணிப்பதில் பெருமிதம் அடைகிறேன்- பிரதமர் மோடி


அர்ஜூன் டாங்கியில் பயன்படுத்தும் வெடிபொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி


அர்ஜுன் மார்க் 1- ஏ கவச வாகனம் சென்னையில் உருவானது அதை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி

நாட்டின் வட எல்லையைப் பாதுகாக்க தமிழகத்தில் உருவாக்கப்பட்ட இந்த கவச வாகனம் பயன்படுத்தும்பாதுகாப்புத் துறையில் தற்சார்பை ஊக்குவிக்கும் முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது

 


         சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் பல புதிய கண்டுபிடிப்புகளை கொடுக்கும் 1000- கோடி திட்டம்

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் கடலோர பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன

கருணை மற்றும் விடாமுயற்சியின் சின்னமாக இந்திய மீனவர்கள் உள்ளனர்

உலகிலே மிகப்பெரிய சுகாதார கட்டமைப்பு கொண்டது இந்தியா

தமிழ் கலாச்சாரம் உலகப் புகழ் பெற்றது தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கிறது

தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் என்னை சந்தித்த நிகழ்வு மறக்க முடியாதது

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு செல்ல புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் புல்வாமா தாக்குதல் நடந்தது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

                                              இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

இலங்கை யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்வையிட்ட ஒரே இந்தியப் பிரதமர் நான்தான் பெருமை உடையவன் இலங்கை தமிழர்களுக்கு 50- ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளனர் இலங்கைத் தமிழர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது மத்திய அரசு

இலங்கை தமிழர்கள் சம உரிமை மரியாதையோடு இலங்கையில் வாழ்வதே இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது

 தமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளேன் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது மீனவர்களிடம் இலங்கை அரசு கையகப்படுத்திய 320 படகுகள் மீட்கப்பட்டுள்ளன

                                   

           
               "நன்றி, வணக்கம்!" என தமிழில் கூறி உரையை முடித்தார் பிரதமர் நரேந்திர மோடி!