சினிமா செய்திகள்

 


தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது . 

**********************

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.

மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்றும் , அது அதிகம் என்பதால் பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை அமேசான் நிறுவனம் வெளியீட்டது

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த காட்சியும் படத்தில் வைத்திருக்கலாம் என்று கூறி வருகிறார்கள். அதனால், நீக்கப்பட்ட காட்சிகளை வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. என்று கூறியுள்ளார்.

******************************

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், லாக்கப் டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

**********************

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் மற்றும் ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும்‌ ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளான் .அதன் பின் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘D44’, ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்கள் என பட படங்களை தனது கைவசம் வைத்துள்ள தனுஷின் D44 படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

*************************

பரியேறும் பெருமாள் படத்தில் கதிருக்கு தந்தையாக நடித்தவர் தங்கராசு . நாட்டுப்புற கலைஞரும் ,நடிகருமான இவர் நெல்லையில் வசித்து வரும் நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் இவரது வீடு சேதமடைந்துள்ளது . 

அதனுடன் உணவின்றி வறுமையில் இருந்து வரும் தங்கராசுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உதவ முன் வந்துள்ளார் விஷ்ணு 

அவரது வீட்டை சீரமைத்துத் தருவதாக கூறியுள்ளார்.இதே போன்று தங்கராசுடன் நடித்த நடிகர், நடிகைகள் உட்பட திரையுலக பிரபலங்கள் அவரது வறுமையை நீக்க உதவ முன் வருவார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.