சின்னத்துரை-ஸ்வேதா கடலுக்கடியில் கல்யாணம்

 சின்னதுரையும், ஸ்வேதாவும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள். இதில் சின்னதுரை, லைசென்ஸ் பெற்ற ஸ்கூபா டைவர். கடல் மாசு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என நினைத்து இப்படி ஒரு ஏற்பாட்டை சின்னதுரைதான் செய்துள்ளார். 

இதற்காக ஸ்வேதா 1 மாதம் ஸ்கூபா டைவிங் பயிற்சி எடுத்துவிட்டு வந்துள்ளார். பயமா இருந்துச்சி "நான் ரொம்பவே டென்ஷனாக இருந்தேன். எனது பெற்றோரும்தான்.

கூரை வேட்டியோடு சின்னதுரையும், கூரை சேலையுடன், ஸ்வேதாவும், சென்னை நீலாங்கரை கடலில் குதித்த போது.. அங்கு இருந்த பலருக்கும் ஏன் என்று புரியவில்லை. அவர்கள் கழுத்தில், மாலை இருப்பதை பார்த்தால்.. ஏதோ சினிமா சூட்டிங் போல என்று சிலர் நினைத்துக் கொண்டனர். 

ஆனால்.. அங்கு நடந்தது ஒரு திருமணம். ஆம்..! வெளிநாடுகளில் நடப்பதாக கேள்விப்பட்டிருப்போமே.. under water wedding.. அதுதான் அங்கு நடந்தது. 60 அடி ஆழத்திற்குச் சென்று, ஸ்வேதாவும், சின்னதுரையும் மாலை மாற்றிக் கொண்டனர். 

டும் டும் டும் சத்தம் கேட்காவிட்டாலும், கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையே கெட்டி மேளமாக நினைத்து, ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டினார் சின்னதுரை. 

இது அத்தனையும், புரோகிதர் குறித்துக் கொண்ட காலை 7.30 மணிக்குள் நேற்று நடந்தேறியுள்ளது. திருமண இடம், ஆழ்கடல், வங்காள விரிகுடா இவர்கள் திருமண பத்திரிக்கை அச்சடித்ததுமே சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. 

என்னப்பா இது.. "மணமகன் சின்னதுரை, மணமகள் பெயர் ஸ்வேதா, இடம், ஆழ்கடல், வங்காள விரிகுடா, நீலாங்கரை" என்று அச்சடித்துள்ளார்களே என்று கண்ணை கசக்கி பார்த்தவர்கள் பலர். ஆம்.. உண்மையில் இப்படித்தான், அந்த இன்விடேஷன் இருந்தது. 

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு கல்யாணத்தை செய்து முடித்துவிட்டனர். 

ஆனால் எங்களோடு 8 ஸ்கூபா டைவர்கள் வந்தார்கள். அதனால் பயம் குறைந்தது. 

புது அனுபவத்தோடு, தாலி கட்டிக் கொண்டது செம த்ரில்லாக இருக்கிறது" என்கிறார் ஸ்வேதா. 

தாலி கட்டி வெளியே வந்தனர் திருமண விழா முழுக்க வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. மணமகனும், மணமகளும் கடலில் இருந்து வெளியே வந்தபோது, ​கரையில் கூடியிருந்த குடும்ப உறுப்பினர்கள் உற்சாகத்தோடு கை தட்டி ஆரவாரம் செய்தனர். 

இதன்பிறகு மற்ற திருமண சடங்குகள் நடந்தன. கடலுக்கடியில் கல்யாணம் பேஷன் இப்போது இது ஒரு பேஷனாக மாறிவிட்டது என்கிறார்கள் ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காரர்கள். சென்னையில் இந்த மாதமும், புதுச்சேரியில் அடுத்த மாதமும் இப்படி கடலுக்கு அடியில் கல்யாணம் நடைபெற உள்ளதாம்.