செய்திகள்

 


தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி என தொடர்ந்து இயங்கி வரும் நிலையில், நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4வது ஆண்டு தொடக்க விழா மாநாடு பிப்ரவரி 21ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 11.2.2021 நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநாட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் கூறப்படுகிறது.

********************************

சட்டப்பேரவை தேர்தலுக்கும், வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கும் வித்தியாசம் இல்லை என நீதிபதி கிருபாகரன் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. மதுவுக்காக தங்களை விற்கும் வழக்கறிஞர்கள் கூட இருப்பதாக கடுமையாக கருத்துக்களை உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ளது.

*************************

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் வெறும் வாக்குறுதியாக அமைந்து தற்போது வரை இருப்பதாகவும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு மத்திய, மாநில அரசுகள் மதுரை மெட்ரோ ரயில் சேவை குறித்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், விசாரணையை மார்ச் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

**********************

தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்கள், 7 மாநகராட்சிகள் உள்ளிட்டவற்றில் புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக ஏடிஎஸ்பி தலைமையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படும் என தகவல் கூறப்படுகிறது.

***************************

சசிகலா 09.02.2021 சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் இன்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,உறுப்பினர் அட்டை வழங்கும் அதிகாரமே பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது. 

புரட்சித்தலைவர் கண்ட அதிமுகவில் ஜெயலலிதா இருந்த வரையும் அதில் உள்ள சட்ட விதிகளில் பொதுச்செயலாளர் தான் எல்லா அதிகாரம் உடையவர். 

அவர் தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பொதுச் செயலாளர் தான் ஒருவருக்கு பதவி நியமனம் செய்ய முடியும், பதவியில் இருந்து நீக்கமுடியும்.

மேலும் பொதுச்செயலாளருக்கான சட்டப்போராட்டத்தை சசிகலா தொடர்வார் என்று தெரிவித்துள்ளார்.