ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட பொதுமக்களுக்கு தடை

 





சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா இறுதிக்கட்ட பணி நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. 

இறுதிக்கட்ட பணிகள் இன்னும்  முடிவடையாததால், ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக பொதுப் பணித் துறை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 27-ஆம் தேதி மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் இன்று பழனிசாமி திறந்து வைத்தார். 

50,422 சதுர அடியில் ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கிய நினைவிடம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பார்வையிட தடை விதித்திருப்பதால் சசிகலா சென்னை வந்தால் ஜெயலலிதா நினைவிடம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பிப்ரவரி 7ம் தேதி சசிகலா சென்னை வரவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் ஜெயலலிதா நினைவிடம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழக பொதுப்பணித்துறையின் தடை விதிப்பால் பெங்களூருவில் இருந்து வரும் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் செல்ல முடியாது. 

சிறை செல்லும் முன் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம் எடுத்து விட்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.