செய்திகள்

 


5 நாள் தொடர் விடுமுறையில் 750 கோடிக்கு மது விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

_____________________________

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 12.30 மணிக்கு திடீரென ஜெயலலிதா சமாதியில் நடந்து வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு வரும்படி நேரில் அழைப்பிதழ் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 18ம் தேதி (திங்கள்) டெல்லி செல்கிறார். 

______________________________

பொது இடங்களில் ‘பிராங்க் ஷோ’ என்ற பெயரில் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த யூ-டியூப் சேனல் உரிமையாளர், ஒளிப்பதிவாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

__________________________

பொங்கல் வைக்கும் விழா, விளையாட்டு போட்டிகள் என காணும் பொங்கலை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா நாளை 14.01.2021 சென்னை வருகிறார். அவர் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.

_____________________________

மருத்துவ படிப்பிற்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி துவங்கி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, சிறப்பு பிரிவினர், பொதுப்பிரிவினர் என அனைத்து பிரிவினருக்கும் டிசம்பர் 24ம் தேதி முதற்கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, கடந்த 11ம் தேதி மதியம் முதல் இன்று மாலை வரை மேனேஜ்மென்ட் பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது. 2ம் கட்ட கலந்தாய்வு 13.01.2021  நிறைவடைகிறது.

________________________

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்  நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

ஒரு தமிழக குடிமகன் மகாராஷ்டிராவுக்கு சென்றால், அங்கு அவருக்கு புதிய அட்டை பெற வேண்டியிருந்தது.

தமிழகத்தில் பொருந்த கூடிய ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் மிகவும் முக்கியமானது. நான் அதில் கவனம் செலுத்துவேன். 

புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு, தமிழக பொங்கல் பரிசு கிடைப்பது பற்றி  கலெக்டரை சந்தித்து பேசுவேன் என்றார்.

_________________________

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் பா.வெ.தாமோதரன் (71). அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த 2001-2006ல் பொங்கலூர் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று,  பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 15ம் தேதி கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நுரையீரல் பாதிப்பினால் அவர் 12.01.2021 மாலை உயிரிழந்தார்.