மேலும் செய்திகள்

 


தமிழகத்தில் நாளை மறுநாள் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 11 ஆயிரத்து 600 பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பயிலும் 18லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளனர்.

************************

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். 

நாளை முதல் முழுவீச்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

***************************

சென்னை சென்ட்ரலில் இருந்து குஜராத் மாநிலம் கோவடியாவுக்கு புதிய வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

புனே, சூரத் வழியாக கோவாடியா செல்லும் புதிய ரயில் சென்னையில் ஞாயிறு தோறும் 10.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் அதிகாலை 3 மணிக்கு கோவாடியாவை சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

*******************************

புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார். 

இவருக்கு வயது 70.சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது.

பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி, சாமிநாதன், சங்கரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து இருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி என்பது குறிப்பிடத்தக்கது.

***********************************

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் காளை முட்டியதில் பலத்த காயம் அடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நண்பரின் காளையை போட்டிக்கு அழைத்து வந்தபோது,நவமணி அவரது சகோதரர் கோபி இருவரையும் காளை முட்டியது.பலத்த காயம் அடைந்த இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

*********************************

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20.29 லட்சத்தை தாண்டியது. 

பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,029,541 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 

உலகம் முழுவதும் கொரோனாவால் 94,912,942 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 67,752,999 பேர் குணமடைந்துள்ளனர். 

மேலும் 111,579 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

**********************************