காலை நேரச் செய்திகள்

 


குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

______________________________


தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தாமதமாக 11 மணிக்கு கூடுகிறது. காலை 8.50 க்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தாமதமாக 11 மணிக்கு நடைபெறும் என தகவல் தெரியவந்துள்ளது. தேர்தல் கூட்டணி, எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் என்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.

________________________________

கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகள் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_____________________________________

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 11 ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலா விடுதிகளும் திறக்கப்பட உள்ளது. வாகனம், யானை சவாரி, வளர்ப்பு யானைகள் முகாம், சுற்றுலா விடுதிகளில் 50% சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

__________________________________

மகாராஷ்டிராவில் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

____________________________

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. வன்முறையை தூண்டும் வித‌த்தில் கருத்துகளை வெளியிட்டதால் டிரம்ப் கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

_______________________________

ஈரானிய தளபதி சுலைமானியைக் கொன்ற வழக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய ஈராக் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

_____________________________

இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.