தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

 


இரண்டு நாள் பயணமாக 18.01.2021 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.

பிரதமர் மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி. முதல்வர் பழனிசாமியுடன், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடியை 19.01.2021 நேரில் சந்தித்து, முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், தமிழகத்தில் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், கூட்டணி மற்றும் தமிழகத்துக்கு பேரிடர் நிவாரணம் போன்றவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல் கூறப்படுகிறது.

18.01.2021 மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்போவதில்லை என்றும் முதல்வர் பழனிசாமியே ஜெயலலிதா நினைவிடத்தை திறக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,