மட்டன் வெஜிடபிள் குருமா
வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான மட்டன் வெஜிடபிள் குருமா அசைவ உணவு செய்யலாம். இப்போது இந்த மட்டன் வெஜிடபிள் குருமாவை சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
வேகவைத்த மட்டன் - 1 கிலோ
உருளைக்கிழங்கு - கால் கிலோ
கேரட் - கால் கிலோ
பீன்ஸ் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 5
இஞ்சி-பு ண்டு விழுது - 2 டீஸ்பு ன்
தேங்காய் - 1 மூடி
முந்திரி - 15
சோம்பு - 2 டீஸ்பு ன்
பட்டை - 2
இலவங்கம் - 10 கிராம்
ஏலக்காய் - 5
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பு ன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பு ன்
செய்முறை :
👉 முதலில் மட்டனை நன்றாக சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
👉 பின் தேங்காய், முந்திரி மற்றும் சோம்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் எண்ணெயை காயவைத்து பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
👉 பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பு ண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும். பின்பு நறுக்கிய காய்கறிகள், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த மட்டனை சு ப்புடன் சேர்த்து உப்பு போட்டு கிளறவும்.
👉 கடைசியாக ஒரு கொதி வந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால், மட்டன் வெஜிடபிள் குருமா தயார்!!
சூடான மட்டன் வெஜிடபிள் குருமா ரெடி.
வணக்கம் அன்புடன் கார்த்திகா