சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் -அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி



பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா (69), கடந்த 2017-ம் ஆண்டு முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தண்டனைக் காலம் நிறைவடைவதையடுத்து வரும் 27-ம் தேதி காலை சசிகலா விடுதலை செய் யப்பட இருப்பதாக சிறைத்துறை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. சசிகலாவின் விடுதலை, தமி ழக சட்டப்பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் சசிகலாவுக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையிலுள்ள சசிகலாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூர் சிவாஜி நகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.மேலும் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில்,சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் கூறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.