எலுமிச்சைப் பழத்தோலில் உள்ள நன்மைகள்

 


எலுமிச்சைப் பழத்தின் தோலில் இவ்வளவு நன்மைகளா!!

எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சைப் பழத்தைப் போல எலுமிச்சைப் பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது.

எலுமிச்சைப் பழத்தின் தோலில் வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. மேலும் எலுமிச்சைப் பழத்தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது.

எலுமிச்சைப் பழத்தோலில் உள்ள நன்மைகள் :

 பாத்திரத்தில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி, அதில் எலுமிச்சை தோலைப் (எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளை தோலை நீக்கி) போட்டு 15 நிமிடங்களுக்கு பின் வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால், செரிமான மண்டலம் வலிமையாகி, உடல் எடை குறையும்.

எலுமிச்சைப் பழத்தின் தோலின் மூலமாக செய்யப்படும் டீயை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள ஹைட்ரஜன் அளவைச் சீராக்கி, கல்லீரலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நமது நகங்களை 15 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் தோலை நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்து பின் கழுவினால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.

 எலுமிச்சைப் பழத்தின் தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறமும் மறைந்து விடும்.

 எலுமிச்சைத் தோலை துருவி, ஸ்பிரேயர் உள்ளே போட்டு அதனுடன் ஒயிட் வினிகரை சேர்த்து 2 வாரம் கழித்து, அதை அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யும் மருந்தாக பயன்படுத்தலாம்.

 எறும்புகள், கரப்பான் தொல்லை போன்ற பு ச்சிகளைத் தடுக்க சாக்பீஸ் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எலுமிச்சைப்பழத் தோலை பயன்படுத்தலாம்.

 எலுமிச்சைத் தோலை வெயிலில் உலர்த்தி நன்றாக காய்ந்தவுடன் பொடித்து அதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவு பெறும்.

 சிலருக்கு கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். அவர்கள் எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது. எலுமிச்சைப்பழத் தோலில் உள்ள எண்ணெய், நறுமணத் தைலங்கள் தயாரிக்க உதவுகிறது.

 எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும். 

 வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளைத் திறந்தாலே துர்நாற்றம் வீசுகிறதா? இதைக் கட்டுப்படுத்த, எலுமிச்சைப்பழத் தோலை அதில் போட்டு வைக்கலாம். மைக்ரோவேவ் ஓவனைத் தூய்மைப்படுத்த, எலுமிச்சைப்பழத் தோலைப் பயன்படுத்தலாம்.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா