மக்களுக்கு நம்பிக்கையளிக்க பிரதமரும் செய்திருக்கலாம் – கே.எஸ்.அழகிரி

 


அமெரிக்காவில் அதிபரும் ,இந்தோனிசியா அதிபரும், முதன்முதலாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து  மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு முறை குறித்து ஏற்கனவே இரண்டு முறை ஒத்திகை பார்க்கப்பட்டது.

பின்னர் நாடு முழுவதும் ஜனவரி16.01.2021  முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.தொடர்ந்து இரண்டாவது நாளாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா  தடுப்பு ஊசியை அமெரிக்காவில் அதிபர் ஜோபைடனும் ,இந்தோனிசியாவில் அதிபரும், முதன்முதலாக அவர்களே போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்தனர். நமது பிரதமரும் அதை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.