இரு வரி செய்திகள் ....உண்மை செய்திகள்

 


விருப்ப ஓய்வு பெற்றுள்ள நிலையில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன் என சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பேன் எனவும் கூறினார்.

______________________________________

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவுக்கு தடை கோரி கோபாலபுரம் பிரபு என்பவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

________________________

அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஜோ பைடன், ஒபாமா, போரீஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதரவாளர்கள் மூலம் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டி விட்டதாக தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

___________________________________________________

ஜனவரி 16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்து பார்வையிடுகின்றனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

______________________________

06.01.2020 பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 800 கன அடியில் இருந்து 2000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

__________________________

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

_________________________________