செய்திகள்

 

சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. 

ரயில்வே ரோட்டில் உள்ள வீட்டில் நுழைந்து கொடூரமாக வியாபாரி குடும்பத்தை கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். தாக்குதலில் நகை வியாபாரி தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

******************************

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை மூலம் ஜனவரி மாதம் உண்டியல் வருமானம் ரூ.3¼ கோடி கிடைத்துள்ளது. இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்த்து மொத்தத்தில் 3 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 245 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல், இரண்டு உண்டியல் எண்ணிக்கையிலும் சேர்ந்து 1, 503 கிராம் தங்கமும், 24 ஆயிரத்து 546 கிராம் வெள்ளியும், 105 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

******************************

சேலத்தில் சிறைக்கைதி மருத்துவமனை 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். சேலத்தில் கொலை வழக்கில் கைதாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதி மருத்துவமனை 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.

**********************************

நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

டெல்லியில் விவசாயிகள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாகர்கோவிலில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்திய 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

***************************

சென்னை தியாகராயர் நகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. நகைக்கடையில் சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.