உண்மை செய்திகள் -விரைவுச் செய்திகள்

 


இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 182 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்துடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

                                                *********************

முதுகலை சட்டப் படிப்புக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் ஓராண்டுமுதுகலை சட்டப்படிப்பு வருங்காலத் தில் நீக்கப்படும் என்றும் இந்திய பார் கவுன்சில் அறிவித்துள்ளது.

                                                *********************

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் ஜனவரி 15 அன்று ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

                                                *********************

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் டிவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் வன்முறைபரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

                                                *********************

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் காஷ்மீர் பகுதியில் சாலையில், வீடுகள், கட்டடங்கள் என அனைத்து இடங்களிலும் உறைபனி சூழ்ந்துள்ளது.

                                                *********************

தியாகி வடிவேலு தொடர்ந்த தியாகிகள் ஓய்வூதியம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

                                                *********************

கடைமடையில் மீண்டும் தொடங்கிய கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் சம்பா சாகுபடி சேதமடையும் அபாய நிலையில் இருப்பதால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.