செம்ம ஷாக்கில் தேமுதிக.. என்ன செய்ய போகிறது.. சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை



 அதிமுக உடன் கூட்டணியில் தொடர்வதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து சென்னையில் இன்று தேமுதிக முக்கிய ஆலோசனை நடத்துகிறது. 

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, தங்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அதிமுக தருவதில்லை என்று ஆதங்கத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது. 

இதேநேரம் உரிய முக்கியத்துவம் அளிக்காவிட்டால் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என தேமுதிக கூறி வருகிறது.

தேமுதிக உடன் சீட் குறித்து பேச்சுவார்த்தையை அதிமுக இதுவரை தொடங்கவில்லை. 

அதேநேரம் பாமக, பாஜக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் தான் தேமுதிகவினர் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்ற ரீதியில் எச்சரித்து வருகிறார்கள்.

"யாருக்கு எவ்வளவு தொகுதி என்பதை கூட்டணிக்கான தலைமை பேச வேண்டும்... தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால்தான் பேச்சுவார்த்தை என்று சொல்வது, தாமதத்திற்கு வழிவகுத்துவிடும்.. 

கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க அதிமுக காலதாமதம் செய்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் ஓபனாக கூறியும் இதுவரை பதில் இல்லை

தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. மிக குறைந்த அளவு தொகுதிகளை தரவே அதிமுக விரும்புவதாக சொல்லப்படுவதால் தேமுதிக அதிர்ச்சி அடைந்துள்ளது. 

அடுத்த என்ன முடிவு எடுக்கலாம் என தேமுதிக பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.45 மணியளவில் நடக்கிறது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா பங்கேற்கின்றனர்.