பழனியில் மக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பு பிடிபட்டது ....மேலும் சில செய்தி துளிகள்

 


பழனி மலைக்கோயில் ரோப் கார் அருகே தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழு பல நாட்களாக ரோப்கார் ஊழியர்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீளம் கொண்ட மலை பாம்பினை இன்று தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டது.                                         

பிடிக்கப்பட்ட 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை தீயணைப்பு துறை நிலைய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டன.             

விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மலைப்பாம்பினை பெற்றுக் கொண்டு சென்றனர். 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்ததற்கு ரோப்கார் ஊழியர்களும் பக்தர்களும் தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

                 *******************

         மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும்"


அனைத்து மாணவர்களும் மருத்துவ 

பரிசோதனைக்கு பிறகே கல்லூரிகளுக்குள் 

அனுமதிக்கப்பட வேண்டும்" -மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் உத்தரவு

                      ******************

        மனுதாரருக்கு தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம் 


- பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிட சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு

                     *******************

           தமிழகத்தில் பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் தயார்: அமைச்சர் செங்கோட்டையன்

                    **********************

          பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தால் மன உளைச்சலில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்ம விபூஷன் உட்பட மத்திய, மாநில அரசுகள் அவருக்கு அளித்த விருதுகளை திருப்பி அளிக்க முடிவு. 


இசைக் கலைஞர்கள் சங்க தலைவர் தினா தகவல்.

                   *******************