திமுக மக்கள் கிராம சபை கூட்டம்-சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி

 

திமுக மக்கள் கிராம சபை கூட்டம் இன்று 07.01.2021 சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் நடைபெற உள்ள நிலையில்,இதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.  

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று 07.01.2021 மாலை 3 மணியளவில் இதன் தொடர்ச்சியாக சேலம் மேற்கு மாவட்டம் எடப்பாடி தொகுதி நங்கவள்ளி ஒன்றியம் சூரப்பள்ளி ஊராட்சி, ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற உள்ள மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.