இன்று ஒரு ஆன்மிக தகவல்

 ராகு-கேது உங்களுக்கு எந்த மாதிரியான கெடுதலை செய்யும் தெரியுமா? ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?



கிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்கும் ராகு மற்றும் கேது ஒருவருடைய ஜாதகத்தில் சரியான இடத்தில் அமையாவிட்டால் தோஷங்களை ஏற்படுத்துகிறது. 

இதன் விளைவாக அந்த ஜாதகர் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது அவசியமாகி விடுகிறது. இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள சுய ஜாதகத்தை ஆராயும் பொழுது பரிகாரம் செய்யச் சொல்வார்கள். 

ராகு கேது அப்படி என்ன மாதிரியான வேலை செய்கிறது? அதற்கான பரிகாரம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

ராகு கேது தோஷம் என்பது சர்ப்ப தோஷத்தை குறிக்கிறது. ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு 18 மாதங்கள் கழித்து ராகு மற்றும் கேது பெயர்ச்சி ஆகிறது. அப்படி பெயர்ச்சியாகும் பொழுது அது எந்த இடத்தில் நிற்கிறதோ! அந்த வீட்டில் அதிபதி தரக்கூடிய பலன்களை தான் இந்த கிரகங்களும் கொடுக்கும். அதாவது மேஷ ராசியில் இந்த கிரகங்கள் பொழுது மேஷ ராசியின் அதிபதியாக இருக்கும் செவ்வாய் பகவான் செய்யக்கூடிய விஷயங்களை இந்த கிரகங்களும் செய்யும்.

உங்கள் ராசிக்கு மேஷ ராசியில் ராகு கேது பெயர்ச்சியாகும் பொழுது அதிகமான சீற்றத்தை கொடுக்கும். 

ரிஷப ராசியில் ஆசைகளை தூண்டிவிடும். மிதுன ராசியில் காதல் உணர்வை அதிகப்படுத்தும், 

கடக ராசியில் குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கும், சிம்ம ராசியில் அகங்காரம், ஆணவத்தை பெருக்கும். கன்னி ராசியில் சுயநலமாக செயல்படும் எண்ணத்தை உருவாக்கும். துலாம் ராசியில் தொழில் மற்றும் வியாபாரத்தில் மேன்மையை கொடுக்கும்.

விருச்சிக ராசியில் இருக்கும் பொழுது உங்களுக்கு அதிக சுறுசுறுப்பையும், வேகத்தையும் கொடுக்கும். 

தனுசு ராசியில் இறை நெறியில் ஆர்வத்தையும், மகரம் மற்றும் கும்ப ராசியில் விஷ வாக்கையும், மீன ராசியில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மீது ஆசையையும் உருவாக்கும். 

ராகு கேது பெயர்ச்சியின் பொழுது எந்த பாவத்தில் இருக்கிறது? என்பதைப் பொறுத்து ராகு-கேது பரிகாரத்தை நாம் மேற்கொள்ளலாம்.

ராகு கேது கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ! அந்த நட்சத்திரத்தின் அதி தேவதைகளுக்கு அர்ச்சனை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். 

பாம்பு படுக்கையை கொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலமும் ராகு-கேது தோஷ நிவர்த்தி செய்யலாம்.

பிரதோஷ காலங்களில் சிவபெருமான் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்து வர ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும். குறிப்பாக ஸ்வாதி, சதயம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களில் வரும் பிரதோஷ காலம் விசேஷமானதாக கருதப்படுகிறது.

தை, ஆடி போன்ற மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மஞ்சள் காப்பு அணிவித்து, விளக்கு ஏற்றி வர காலசர்ப்ப தோஷங்கள் விலகும். 

ராகு கேது பரிகார ஸ்தலங்களில் பரிகாரம் செய்வதும் சிறந்த பலனை கொடுக்கும். உங்கள் சுய ஜாதகத்தில் 5, 6, 7, 8 ஆகிய இடங்களில் ராகு பகவான் அமைந்திருந்தால் உங்களுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும். 

ராகு -கேது அருளைப்பெற பச்சை கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம்.

 நவக்கிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பூரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். 


ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம்.


* சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். 


நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் அகன்றிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகு-கேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.


* காரைக்குடியில் செஞ்சை பகுதியில் நடராஜ் தியேட்டர் கீழ்புறம் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம்.


* பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம்.


* திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம்.


காமதேனுவின் கால் பதிந்த தலம் தான் மாடம்பாக்கம். இங்கு தேனுபுரீசுவரர் கோவிலுக்குள் சென்றதும் முன் மண்டபமும் மண்டபத்துக்கு இடப்புறம் காணப்பெறும் தூண் ஒன்றில் சரப மூர்த்தியின் உருவம் ஒன்றும் காணப்படுகிறது. ஆர்த்தெழுந்த சரபத்தைக் கண்டு நரசிம்மன் அஞ்சி ஓடியிருப்பார்.

சரபப் பறவையும் விடாமல் நரசிம்மத்தை தாவி பிடித்திருக்கும். அவ்விதம் தாவும் தகைமையைத்தான் சிற்பி கற்தூணில் இங்கு நிலை பெறச் செய்திருக்கிறார். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் மக்கள் பெருமளவில் வந்து இந்த சரப மூர்த்தியை வழிபட்டு செல்கிறார்கள்.


இவர்கள் அதிகம் விஷத் தன்மை உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் குழந்தை பாக்கியம் தடைபடும். நீங்கள் கண்டிப்பாக ராகு கேது பரிகாரம் செய்தால் நல்லது நடக்கும்.

ராகு- கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி- அதற்காக பயப்படத் தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில்சென்று வழிபட்டால் போதும், ராகு- கேதுப் பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்