இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி 25 வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தமிழக அளவில் உள்ள நான்கு கைவினை கலை கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு சிற்பம் செதுக்குவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.
இதில், மாமல்லபுரம் அரசு சிற்ப கல்லூரி மாணவர் சுதர்சன் சோழர்கால ஓட்டு சீட்டு, பார்லிமென்ட் சட்டசபை கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மரத்தில் சிற்பமாக செதுக்கினார்.
அதே கல்லூரியை சேர்ந்த முரட்டுக் கருப்பன் என்ற மாணவர் நூறு சதவீத ஓட்டு பதிவிற்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் ஓட்டளிக்க வலியுறுத்தி உலோக சிற்பம் செதுக்கினார்.
இதில், மரச்சிற்பம் முதலாவது பரிசையும், உலோக சிற்பம் மூன்றாவது பரிசையும் பெற்றது.
முதல் மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற மாணவர்களுக்கு சக மாணவர்கள், கல்லூரி முதல்வர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களது வாழ்த்து தெரிவித்தனர்.