போட்டோவிற்கு போஸ் கொடுத்த ட்ரம்ப்! கண்டுகொள்ளாமல் சென்ற ட்ரம்பின் மனைவி

 


அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் அவர்களுக்கு  பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் டிரம்ப் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. விழாவை புறக்கணித்துவிட்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய அவர், ப்ளோரிடாவில் அவரது மனைவி மெலனியா உடன் விமானத்திலிருந்து இறங்கி வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த புகைப்படக்காரர்கள் மத்தியில், கைகளை அசைத்து போஸ் கொடுத்தார். ஆனால் மெலனியாடிரம்ப் உடன் நிற்காமல், இறங்கிய வேகத்திலேயே நடந்து சென்றுள்ளார். 

இதனால் ட்ரம்ப் தனியாளாக நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெட்டிசன்கள் பலரும் வீடியோவை பல விதமான கோணத்தில் பகிர்ந்து வருகின்றன. இதற்கு முன்பதாக மெலனியா அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றதால் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.