தேமுதிகவின் நிலைப்பாடு -பிரேமலதா விஜயகாந்த்

 


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவகத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்பொழுது அவர் பேசுகையில் , இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.விரைவில் பொதுக்குழு , செயற்குழுவை கூட்டி கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வோம்.

தேமுதிகவை பொறுத்தவரை முரசு சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.