திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

 


இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக,அதிமுக,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

இந்நிலையில் இன்று  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் .மேலும் கட்சி ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும்  இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலிலேயே தி.மு.க.விற்கும் – தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அதைத்தான் இப்போதும் சட்டமன்றத் தேர்தலையொட்டி செய்து கொண்டிருக்கிறார். 

போகின்ற இடங்களில் எல்லாம் அவர் பிரச்சாரத்திற்கு மக்களின் பேராதரவு கிடைக்கிறது என்பதை ஊடகங்கள் மூலமாக நீங்கள் அறியலாம். தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படித்தான் வாய்ப்பினைப் பெற்றேன். 

கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டரும் அப்படி உழைத்துத்தான் கட்சியில் முன்னேறியிருக்கிறார்கள். 
இதில் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று பேசுவது எல்லாம் எதையாவது சொல்லி தி.மு.க.வை எப்போதும் குறை சொல்பவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு. அவ்வளவுதான்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.