பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற கார்த்திக் - அரசு வேலை தர கோரிக்கை


பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 

பொறியியல் பட்டய படிப்பு படித்து வரும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

17 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாவது இடத்தை பிடித்தார். 

10 காளைகளை பிடித்த மேட்டுப்பட்டி கார்த்திற்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டது. 

அதேபோல் சிறந்த காளைக்கான முதல்பரிசை பாலமேட்டைச் சேர்ந்த ஜெயராமன் பெற்றுகொண்டார். 

இவருக்கு பசுமாடு கன்றுடன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

தல்பரிசு வென்ற கருப்பாயூரணி கார்த்திக் பொறியியல் பட்டய படிப்பு படித்து வரும் தமக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

சிறுவயதிலே தனது தந்தையை இழந்து மூன்று தங்கைகளுடன் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வருவதால் முதல்வர் உதவ வேண்டும் எனவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.