நீட் தேர்வில் போலி சான்றிதழ் கொடுத்து கலந்தாய்வில் பங்கேற்ற மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் பெற்ற மாணவி 610 மதிப்பெண் பெற்றதாக சான்றிதழ் அளித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வழக்கறிஞரை சந்திக்கவந்த மாணவியின் தந்தை பாலச்சந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
______________________________________
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திங்கட்கிழமை பதவியேற்கிறார். நீதிபதி சஞ்சீப் பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 50-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
_______________________________
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், மாவட்டங்களில் வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
_____________________
கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதி அளித்துள்ளார். 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம். ஜன.5 முதல் வழிபாட்டு தலங்கள், கலை நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கினார்.
____________________________
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,82,612 -ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் கொரோனாவால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,108-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 8,72,266 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3,238 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
___________________________
ஜிஎஸ்டி இதுவரை இல்லாத அளவாக டிசம்பரில் ரூ.1,15,174 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 2019-ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019 ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,13,866 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதே உச்சமாக இருந்தது