வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாடுபிடி வீரர்கள்

 


டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு ஆதரவாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய வீரர்கள். 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவாசயிகளுக்கு ஆதரவாக, மாடு பிடி வீரர்கள், ‘நாங்கள் விவசாயிகள்! தீவிரவாதிகள் அல்ல! என்று அச்சிட்ட பேனர்களை கரங்களில் ஏந்தியவாறு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்