முக்கியச் செய்திகள்

 

செய்திகள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

_________________________

உலக செல்வந்தர்கள் பட்டியல்:


பு;ம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக செல்வந்தர்கள் பட்டியலில் அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

____________________________

கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமனம்:


தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களை தடுக்க ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

____________________________

ரூ.1,000 பொங்கல் போனஸ்:


தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

______________________________

இன்று தொடங்கி வைத்தார்:


மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் இரட்டை அடுக்கு 1.5கி.மீ நீள பெட்டக ரயில் போக்குவரத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

_________________________________

மத்திய அரசு அறிவுறுத்தல்:


பறவைக்காய்ச்சல் பரவலைத் தடுக்க, தொற்று கண்டறியப்பட்ட 12 மையங்களை கண்காணிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

_________________________________

தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை:


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தி வருகிறார்.

________________________________

தெற்கு ரயில்வே அறிவிப்பு:


வருகின்ற 10ஆம் தேதி முதல் சென்னை-மதுரை தேஜஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

_________________________________

வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு:


தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

____________________________

மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு:


தைப்பூச திருவிழாவை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 25,000 பக்தர்கள் மட்டுமே பழனி கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

______________________________________

முதல் நாள் ஆட்ட நேர முடிவு:


இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை எடுத்துள்ளது.

___________________________

3வது சுற்றில் வெற்றி:


சவூதி அரேபியாவில் நடைபெற்று வரும் டக்கர் ராலி கார் பந்தயத்தில் தொடர் சாம்பியனான நாசர் அல்-அட்டியா 3வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். 

_____________________________

50வது லீக் ஆட்டம்:


7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 50வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஒடிசா அணிகள் மோதுகின்றன.