தமிழக புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்


தமிழகத்தின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். 60 வயதை எட்டியதால் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை 3 மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீண்டும் பணிநீட்டிப்பு  ஜனவரி 31-ஆம் தேதி வரை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் நாளையுடன் ஓய்வு பெற உள்ளநிலையில், தற்போது ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்த தலைமைச் செயலாளர் கூறப்பட்டது. 

ஆனால், தற்போது டெல்லியில் பணியாற்றிய ராஜிவ் ரஞ்சன் மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.